சொல்லால் விளங்குவதல்ல எங்குமிருக்கும் பரப்பிரம்மம்.
சொல்லால் பெயரிடப்பட்டதல்ல என்றுமிருக்கும் பரப்பிரம்மம்.
*****
பெயரில்லாததே இவ்வுலகிற்கும் சொர்க்கத்திற்கும் காரணம்.
பெயரிடப்பட்டது இவ்வுலகப் பொருட்களுக்குக் காரணம்.
*****
பற்றில்லாதவர் பிரபஞ்சத்தின் இரகசியம் அறியலாம்.
பற்றுள்ளவர் மாயையின் விளையாட்டைக் காணலாம்.
விளைவு இரண்டானாலும் மூலம் ஒன்றே.
*****
விளக்கம் அறிய, வேண்டியது வெளிச்சம்.
மதியால் ஊகிக்க முடியாத புதிர்
புதிருக்குள் புதிர், ரகசியங்களின் கதவு.
*****
Monday, December 5, 2011
நிலையாமை
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.
*****
சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.
*****
நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்.
*****
வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்.
*****
வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.
*****
இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாக் கொண்டதாகும்.
*****
ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்.
*****
உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.
*****
நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.
*****
உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது.

Subscribe to:
Posts (Atom)